ஹாங்காங் சுதந்திரத்தைப் பறித்த சீன ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசா தடை - அமெரிக்கா
ஹாங்காங்கிற்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தை இயற்றிய சீனாவின் ஆளும்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியினர் அமெரிக்கா வர விசா வழங்கப்படாது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அறிவித்துள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹாங்காங்கின் சுதந்திரத்தை வெளியேற்றிய சீன கம்யூனிஸ்ட் கட்சியை தண்டிக்கப் போவதாக அதிபர் டிரம்ப் உறுதியளித்திருந்ததன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்தார்.
சீனா- பிரிட்டன் கூட்டு பிரகடனத்தில் ஹாங்காங்கின் இறையாண்மை பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்த சீனா, தற்போது மனிதஉரிமை மீறலில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார். ஜனநாயக ரீதியான போராட்டம் நடத்துவோரைக் கைது செய்து அத்துமீறல்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்கும் விசா கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக மைக் பாம்பியோ அறிவித்தார்.
Comments