புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரயில்வே கட்டமைப்பு பணிகளில் வேலை

0 2815

6 மாநிலங்களில் 116 மாவட்டங்களைச் சேர்ந்த திரும்பி வந்த புலம் பெயர் தொழிலாளர்களுக்கு, பிரதமரின் வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் 160 ரயில்வே கட்டமைப்பு வளர்ச்சித் திட்டப் பணிகளில் வேலை வழங்கப்படும் என ரயில்வே வாரியத்தின் தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் செய்தியாளர் சந்திப்பில் இதைத் தெரிவித்த அவர், பீகார், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ஒடிசா,ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்டை சேர்ந்த இந்த தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, இந்த மாநிலங்களின் கிராமப்புற  ஏழை மக்களுக்கும் இந்த திட்டத்தில் வேலை வழங்கப்படும் என்றார்.

ரயில்வேயின் திட்டப்பணிகளின் மதிப்பு 1888 கோடி ரூபாய் என்ற அவர், இவர்களுக்கு 125 நாட்கள் வேலை வழங்க ரயில்வே முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments