சர்வதேச விமான சேவை தடைக்காலம் ஜூலை 15 வரை நீட்டிப்பு
சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து சேவைக்கு விதிக்கப்பட்ட தடை அடுத்த மாதம் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பை விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இந்த தடை நீட்டிப்பு சர்வதேச சரக்கு விமான சேவைகளுக்கும், விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் அனுமதி வழங்கப்பட்ட சிறப்பு விமானங்களுக்கும் பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் சில தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க்கங்களில் சர்வதேச விமான சேவையை அனுமதிப்பது குறித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் முடிவெடுக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் எதிரொலியாக கடந்த மார்ச் இறுதி வாரத்தில் இருந்து உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.
ஊரடங்கில் ஏற்பட்ட தளர்வுகளை அடுத்து கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் கட்டுப்படுத்தப்பட்ட உள்நாட்டு விமான சேவைகளை மட்டும் துவங்க அனுமதி அளிக்கப்பட்டது.
சர்வதேச விமான சேவை தடைக்காலம் ஜூலை 15 வரை நீட்டிப்பு #InternationalAirlines | #Aviation https://t.co/xaMZgAi3Cv
— Polimer News (@polimernews) June 26, 2020
Comments