பாகிஸ்தான் விசா வைத்திருந்த 218 இளைஞர்கள் ஜம்மு காஷ்மீரில் மாயம்

0 1780
மாயமான 218 பேரும் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்கள்

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் விசா வைத்திருந்த 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாயமானது தொடர்பாக பாதுகாப்பு முகமைகளுக்கு உளவுத்துறை எச்சரித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 399 பேருக்கு, பாகிஸ்தான் தூதரகம் விசா வழங்கி இருக்கிறது. அவர்களில் 218 பேர் எங்கு இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை.

இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு, ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்வதாக உளவுத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் பின்னர் அவர்கள் உள்ளூர் போராளிகள் என்று நாடகமாடுவதையும் பாகிஸ்தான் வழக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்ற 5 பயங்கரவாதிகளில் மூன்று பேர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்கள். கடந்த 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தான் தூதரகம் மூலம் விசா பெற்று அந்நாட்டுக்கு சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments