திரைப்படங்கள் ஆன்லைனில் வெளிவருவது சினிமா தொழிலுக்கு ஆபத்து-அமைச்சர் கடம்பூர் ராஜு
திரைப்படங்கள் தொடர்ந்து ஆன்லைனில் வெளிவருவது சினிமா தொழிலுக்கு ஆபத்தானது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கொரோனா பரிசோதனையின் போது ரத்தம், சளி மாதிரிகளில் உள்ள ஆர்.என்.ஏ. மூலக்கூறுகள் பிரித்தெடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது. இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி கொரோனா பரிசோதனை ஆய்வகத்தில் 22 லட்சம் ரூபாயில் நவீன தானியங்கி ஆர்.என்.ஏ பிரித்தெடுக்கும் கருவியை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைனில் படம் வெளியிடுவது தொடர்பாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையங்கு உரிமையாளர்கள் அமர்ந்து பேசி முடிவு செய்த பின் அரசின் உதவியை நாடினால் அரசு உதவி செய்யும் என்று கூறினார்.
திரைப்படங்கள் ஆன்லைனில் வெளிவருவது சினிமா தொழிலுக்கு ஆபத்து-அமைச்சர் கடம்பூர் ராஜு #MinisterKadamburRaju | #Cinema | #OnlineCinema https://t.co/6sHLnBGZAN
— Polimer News (@polimernews) June 26, 2020
Comments