இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு சீனாவால் அச்சுறுத்தல் - அமெரிக்கா
சீனாவின் அச்சுறுத்தலை அடக்கும் வகையில், உலகின் பல்வேறு பகுதியில் உள்ள தனது படைத் தளங்களை மாற்றியமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, நிகழ்ச்சி ஒன்றில் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். சீனாவால் தற்போது இந்தியா, வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, ஃபிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
அமெரிக்காவின் உலகளாவிய ராணுவ நிலைகள், அச்சுறுத்தலாக உள்ள சீன ராணுவத்தை அச்சுறுத்தும் வகையில் இருப்பது உறுதிப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார். இதற்கேற்ப, உலகின் பல்வேறு பகுதியில் உள்ள அமெரிக்க படைகளை மாற்றி நிறுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக மைக் பாம்பியோ குறிப்பிட்டார்.
அமெரிக்க படைகள் மாற்றி நிறுத்தப்படுவது கள நிலவரத்திற்கு ஏற்ப இருக்கும் என்றும் அவர் விளக்கம் அளித்தார். ஜெர்மனியில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க படை வீரர்களின் எண்ணிக்கை சரிபாதியாகக் குறைக்கப்படுவது பற்றிய விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் மைக் பாம்பியோ விளக்கம் அளித்துள்ளார்.
Comments