டெல்லி அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அறிமுகம்

0 1370

டெல்லி அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இறப்பு எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது என முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்த அவர், டெல்லியில் வைரஸ் தொற்று அதிக எண்ணிக்கையில் பரவினாலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக கூறினார்.

கொரோனா நிலவரம் மோசமாவதை தடுக்க பிளாஸ்மா தெரபி சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், நோயாளிகளின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அறிய பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

ஆபத்தான கட்டத்தில் இருப்பவர்களுக்கு பிளாஸ்மா தெரபி பலனளிக்காது என்ற அவர், நடுத்தர கட்டத்தில் இருப்பவர்களுக்கு, நிலைமை மோசமடையாமல் தடுக்க அது உதவும் என்பதை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கொரோனா சோதனைகளின் எண்ணிக்கையை 3 மடங்காக உயர்த்தினாலும், வைரஸ் தொற்று தினசரி எண்ணிக்கை 3000 என்ற அளவில் உயர்ந்து வருவதாக  அவர் குறிப்பிட்டார்.

தொற்று பாதித்தவர்களில் சுமார் 45000 பேர் குணமடைந்துவிட்டதாக அவர் கூறினார். லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் மருத்துவமனை, ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை நடத்த அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments