சென்னையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 24 பேர் உயிரிழப்பு
சென்னையில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 81 வயது மருத்துவர் உள்பட 24 பேர் பலியாகியுள்ளனர்.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரம்பூர், பெரவள்ளூர், வியாசர்பாடி, மந்தைவெளி பாக்கத்தை சேர்ந்த தலா ஒருவரும், வில்லிவாக்கத்தை சேர்ந்த 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.
கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேரும், ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் நெசபாக்கத்தை சேர்ந்த 81 வயதான மருத்துவர் உள்ளிட்ட 2 பேரும், ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த 77 வயது மூதாட்டி உள்ளிட்ட 7 பேரும், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 85 வயது முதியவர், 2 மூதாட்டிகள் உள்பட 4 பேரும் இறந்துள்ளனர்.
இதேபோல் சென்னை நந்தம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நுங்கம்பாக்கத்தை சேர்ந்த 63 வயது மூதாட்டியும் பலியாகியுள்ளார்.
Comments