தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி குறையலாம் என தகவல்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிதிக்கான பங்களிப்புகள் குறைந்து வருவதால் இப்போதுள்ள 8.5 சதவிகித வட்டி 8.1 ஆக குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சுமார் 6 கோடி பேர் பங்களிக்கும் வருங்கால வைப்பு நிதிக்கு 8.5 சதவிகித வட்டி வழங்கப்படும் என கடந்த மார்ச் மாதம் தொழிலாளர் அமைச்சகம் அறிவித்தாலும், அதற்கு இதுவரை நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கவில்லை.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிகளை சமாளிக்க பல சலுகைகளை அறிவித்த மத்திய அரசு, வருங்கால வைப்பு நிதிக்கான மாதாந்திர பங்களிப்பை, அடிப்படை ஊதியத்தின் 12 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாக குறைத்தது.
அத்துடன் இந்த நிதியில் இருந்து பணம் எடுக்க விண்ணப்பித்த சுமார் 31 லட்சம் பேருக்கு 11,500 கோடி ரூபாய் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி குறையலாம் என தகவல் #EPFO https://t.co/02a75zWhBD
— Polimer News (@polimernews) June 26, 2020
Comments