WHO வெளியிட்டுள்ள அபாய அறிவிப்பு..!

0 134912

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் கிளர்ந்தெழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம்  தெரிவித்துள்ளது. 

கடந்த இரண்டு வாரங்களாக ஐரோப்பாவில் உள்ள 30நாடுகளில், வைரஸ் தொற்று ஒட்டுமொத்தமாக அதிகரித்துள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய பிரிவு இயக்குநர் டாக்டர் ஹான்ஸ் ஹென்றி லூக் (Dr Hans Henri P Kluge) கவலை தெரிவித்துள்ளார்.

இவற்றில் 11 நாடுகளில் கொரோனா தொற்று வேகமாக உள்ளதாக தெரிவித்துள்ள அவர், உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், ஐரோப்பாவில் வைரஸ் தொற்று குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும் என  கூறி உள்ளார். இந்த 11 நாடுகள் பட்டியலில் சுவீடன், அர்மீனியா, அசர்பைஜான், கசாகிஸ்தான், அல்பானியா, போஸ்னியா, உக்ரேன் உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments