WHO வெளியிட்டுள்ள அபாய அறிவிப்பு..!
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் கிளர்ந்தெழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக ஐரோப்பாவில் உள்ள 30நாடுகளில், வைரஸ் தொற்று ஒட்டுமொத்தமாக அதிகரித்துள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய பிரிவு இயக்குநர் டாக்டர் ஹான்ஸ் ஹென்றி லூக் (Dr Hans Henri P Kluge) கவலை தெரிவித்துள்ளார்.
இவற்றில் 11 நாடுகளில் கொரோனா தொற்று வேகமாக உள்ளதாக தெரிவித்துள்ள அவர், உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், ஐரோப்பாவில் வைரஸ் தொற்று குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும் என கூறி உள்ளார். இந்த 11 நாடுகள் பட்டியலில் சுவீடன், அர்மீனியா, அசர்பைஜான், கசாகிஸ்தான், அல்பானியா, போஸ்னியா, உக்ரேன் உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன.
#BREAKING: தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து வரும் திங்களன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடைபெற உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
— Polimer News (@polimernews) June 26, 2020
ஊரடங்கை நீட்டிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவை பொறுத்து தமிழகத்தில் முடிவு எடுக்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Comments