தமிழக போலீசார் அனைவருக்கும் முகத்தை மறைக்கும் ஷீல்டு வழங்க உத்தரவு

0 3182

தமிழகத்தில் களத்தில் உள்ள காவல் துறையினர் அனைவவருக்கும், ஃபேஸ் ஷீல்டு எனப்படும் முழு முகக்கவசம் வழங்க, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடரபான பொது நல வழக்கு  நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்கள பணியாளர்களாக பணியாற்றும் காவல்துறையினர் 54 ஆயிரத்து 434 பேருக்கு முழு முககவசம் வழங்கப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்தும் காவலர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்ட நீதிபதிகள், களத்தில் பணியாற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் ஃபேஸ் ஷீல்டு எனப்படும் முழு முகக்கவசம், கையுறை ஆகியவற்றை வழங்க உத்தரவிட்டனர்.

காவல்துறையினர் அனைவரும் அவற்றை பயன்படுத்துவதை,  அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உறுதிப்படுத்தவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments