தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கடையடைப்பு போராட்டம்

0 1368

சாத்தான்குளம் தந்தை-மகன் சிறை மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

சம்பந்தப்பட்ட போலீசார் மீது கைது நடவடிக்கை எடுக்க கோரி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் இன்று கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், காயல்பட்டணம், கோவில்பட்டி பகுதிகளில் பெரும்பலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. விளாத்திகுளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸின் உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி மலர்தூவி வியாபாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

இதேபோன்று, சேலம் மாவட்டத்தில் மருந்தகங்கள் உட்பட 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளும், திருப்பூர் மாவட்டத்தில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. நெல்லை, கரூர் மாவட்டங்களிலும் கடைகள் மூடப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments