உயர்நீதிமன்ற நீதிபதியாக அமெரிக்க வாழ் இந்தியரை நியமிக்க அதிபர் ட்ரம்ப் விருப்பம்
அமெரிக்காவின் வாஷிங்டன் உயர்நீதின்ற நீதிபதியாக அமெரிக்க வாழ் இந்தியர் விஜய் ஷங்கரை நியமனம் செய்வதற்கான தனது விருப்பத்தை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
டியூக் பல்கலைக்கழகத்தில் தனது பி.ஏ. படிப்பையும் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பையும் முடித்த விஜய் ஷங்கர், நீதித்துறை, குற்றவியல் பிரிவின் மூத்த வழக்குரைஞராகவும் மேல்முறையீட்டு பிரிவின் துணைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், விஜய் ஷங்கரை நீதிபதியாக தேர்வு செய்ய அதிபர் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது செனட் உறுப்பினர்களால் உறுதிசெய்யப்பட்டால், கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இணை நீதிபதியாக விஜய் ஷங்கர் பணியாற்றுவார்.
Comments