ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி

0 5942

கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்திற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தையையும் மகனையும் காவல்துறையினர் சரமாரியாகத் தாக்கியும், லத்தியை பின்புறம் வழியே உடலுக்குள் திணித்துக் கொடுமைப்படுத்தியும், வேட்டி - சட்டையெல்லாம் ரத்தத்தில் நனையும் வகையில் சித்திரவதை செய்தும், நெஞ்சுப்பகுதியில் உள்ள முடிகளைப் பிய்த்தெறிந்து மிருகத்தனமாகக் கொடுமைப்படுத்தப்படுத்தி உயிர் பறிக்கப்பட்டிருப்பதை பென்னிக்சின் தாயும் - சகோதரியும் கண்ணீரோடும் சொல்வதைக் கண்டு தமிழகமே பதறுவதாக மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

மேலும் அவர்களுக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். அதன்படி, திமுக மகளிரணி செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி, ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தாரிடம் 25 லட்ச ரூபாய்க்கான காசோலையையும், திமுக தலைவரின் கடிதத்தையும் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments