தெலங்கானாவில் கொரோனா பரிசோதனைகளுக்கான மாதிரிகள் சேகரிப்படுவது நிறுத்தம்

0 1771

தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில்,அடுத்த 2 நாட்களுக்கு கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. 

அங்கு குறைந்த அளவிலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக அம்மாநில அரசுக்கு, உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த சூழலில், ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ள சுமார் 8 ஆயிரம் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தபடாமல் இருப்பதாகவும், அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தாமல் மேலும் மாதிரிகளை சேகரிப்பது சிக்கலை ஏற்படுத்தும் என்பதாலும், அடுத்த 2 நாட்களுக்கு புதியதாக மாதிரிகள் சேகரிக்கப்படாது என, அம்மாநில சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments