தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடி,மின்னலுடன் கனமழை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடி,மின்னலுடன் கனமழை பெய்துள்ளது.
துரையில் நேற்றிரவு சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. ஜெய்ஹிந்த்புரம், பெரியார் பஸ் நிலையம், காளவாசல், கோரிப்பாளையம், தல்லாகுளம், அண்ணாநகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 2-வது நாளாக கனமழை பெய்தது. பெரம்பலூர், வாலிகண்டபுரம், பாடாலூர், செட்டிகுளம், வேப்பந்தட்டை, அம்மாபாளையம் உட்பட பல இடங்களில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டித் தீர்த்தது.
திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிளில் 3வது நாளாக இடியுடன் கூடிய மழை பெய்தது. தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் நீர்நிலைகளின் தண்ணீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
புதுக்கோட்டை, குடியாத்தம்,திட்டக்குடி, கள்ளக்குறிச்சி, ஈரோடு,தேனி உள்ளிட்ட இடங்களிலும் நேற்றிரவு மழை பெய்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, தென்காசி, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Comments