அண்ணாநகர், கோடம்பாக்கம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது

0 1677

சென்னை அண்ணாநகர், கோடம்பாக்கம் மண்டலங்களில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

15 மண்டலத்திலும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 650ஆக அதிகரித்துள்ளது. இதில் ராயபுரம் மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 6951ஆக உயர்ந்துள்ளது.

தண்டையார்பேட்டையில் 5717ஆகவும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 5,534ஆகவும், அண்ணாநகரில் 5,260ஆகவும், கோடம்பாக்கத்தில் 5,216ஆகவும் அதிகரித்துள்ளது.

திருவிக நகரில் 3981ஆகவும், அடையாறில் 2922ஆகவும் உயர்ந்த நிலையில், வளசரவாக்கத்தில் 2 ஆயிரத்து 58ஆகவும், அம்பத்தூரில் 1859ஆகவும், திருவொற்றியூரில் 1,787ஆகவும், மாதவரத்தில் 1395ஆகவும் ஆலந்தூரில் 1149ஆகவும் அதிகரித்துள்ளது.

15 மண்டலங்களிலும் இதுவரை 27,986 பேர் குணமான நிலையில், 694 பேர் பலியாகியுள்ளனர். இதுதவிர்த்து 18,969 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments