நாடு முழுவதும் அட்டவணைப்படி இயங்கும் ரயில் சேவை ஆக.12 வரை ரத்து

0 2996

நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 25ந் தேதி முதல் பயணிகள் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

அதன்பின்னர், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்த பயணியர் ரயில் சேவை, ஜூன் ஒன்றாம் தேதி முதல் குறிப்பிட்ட மார்க்கங்களில் மீண்டும் தொடங்கப்பட்டன.

இந்நிலையில், நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு, பயணியர், விரைவு மற்றும் புறநகர் ரயில் சேவைகள் அனைத்தும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 12 வரையிலான முன்பதிவு டிக்கெட்களுக்கான முழு தொகையும், திருப்பி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தற்போது இயக்கப்பட்டு வரும் 200 சிறப்பு ரயில்களின் இயக்கத்தில், மாற்றம் இருக்காது எனவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments