2 நாட்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு 110 பேர் உயிரிழப்பு
பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு 110 பேர் பலி ஆகியுள்ளனர்.
இரு மாநிலங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வரும் சூழலில் பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 83 பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். அதேசமயம், அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்திலும் 24 பேர் உயிரிழந்து, 12 பேர் காயமடைந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிகப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் பலரும் வயல் வெளிகளில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது இடி தாக்கி இறந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என அந்தந்த மாநில முதலமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.
Comments