சீனாவிடமிருந்து நன்கொடை பெற்ற சோனியா காந்தி -பாஜக குற்றச்சாட்டு

0 5479

சீனாவிடமிருந்து  ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு இரண்டு கோடியே 26 லட்சம் ரூபாய் வரை நன்கொடைகள் பெறப்பட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

நாடு முக்கியமா நன்கொடை முக்கியமா என்றும் பாஜக தலைவர்கள் காங்கிரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். பிரதமர் மோடி சீனாவிடம் சரணடைந்துவிட்டதாக ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கடும் விமர்சனம் செய்து வரும் நிலையில் பாஜக பதிலடி கொடுக்க இப்பிரச்சினையை கையில் எடுத்துள்ளது.

2005-06ம் ஆண்டுகளில் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சீனத் தூதரகம் மூலமாக நன்கொடை அளிக்கப்பட்டது என்றும் இந்த நன்கொடை பொது நன்கொடையாளர்கள் என்ற பெயரில் கட்சியின் அறக்கட்டளைக்கு சேர்க்கப்பட்டது என்றும் பாஜக விமர்சித்துள்ளது.

இந்த அறக்கட்டளைக்கு தலைவராக சோனியா காந்தி இருந்ததாகவும் ராகுல்காந்தி, மன்மோகன்சிங், பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருந்ததாகவும் பாஜக தெரிவித்துள்ளது.

சீனாவுடன் ரகசிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அதற்காக லஞ்சமாக இந்த நன்கொடையை பெற்றுக் கொண்டதா என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments