பிரீமியர் லீக்: லிவர்பூல் சாம்பியன் ; 30 ஆண்டு கால கனவு நிறைவேறியது!
இங்கிலீஸ் பிரீமியர் லீக் தொடரில் லிவர்பூல் அணி 30 ஆண்டுகளுக்கு பிறகு பட்டம் வென்றது.
இன்னும் 7 ஆட்டங்கள் எஞ்சியுள் நிலையிலேயே லிவர்பூல் அணி பட்டத்தை கைப்பற்றியுள்ளது. நேற்று நடந்த ஆட்டத்தில் லிவர்பூல் அணி கிரிஸ்டல் பேலஸ் அணியை 4- 0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது . நடப்புச் சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி அணி நேற்று நடந்த ஆட்டத்தில் செல்சி அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. லிவர்பூல் அணியை விட மான்செஸ்டர் சிட்டி அணி 23 புள்ளிகள் பின்தங்கியதையடுத்து, லிவர்பூல் அணி பட்டத்தை கைப்பற்றியது .
தற்போது லிவர்பூல் அணி 31 ஆட்டங்களில் விளையாடி 86 புள்ளிகளை பெற்றுள்ளது. எஞ்சியுள்ள 7 ஆட்டங்களிலும் மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்றாலும், அந்த அணியால் 84 புள்ளிகளையே ஈட்ட முடியும். கடந்த 1990- ம் ஆண்டுக்கு பிறகு பிரீமியர் லீக் தொடரில் லிவர்பூல் அணி பட்டத்தை வென்றது இல்லை. கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு, லிவர்பூல் அணியின் கனவு 2019-20 ம் ஆண்டு சீசனில் நிறைவெறியுள்ளது.
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரில் கடந்த ஆண்டு சாம்பியன் ஆனது லிவர்பூல் அணி. தொடர்ந்து பிரீமியர் லீக் பட்டத்தையும் வென்றிருப்பதால், ரெட்ஸ் அணியியின் ரசிகர்கள் கடும் உற்சாகமடைந்துள்ளனர்.
Comments