ஏழுமலையான் கோவிலில் நாள் ஒன்றுக்கு 12 750 பேர் தரிசனத்துக்கு அனுமதி

0 3057

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல்  நாளொன்றுக்கு  மேலும் 3 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை   நாளொன்றுக்கு 9 ஆயிரத்து 750 பக்தர்களுக்கு  அனுமதிக்கப்பட்டு வருகிறது. 

இதில் 6 ஆயிரம் எண்ணிக்கையில் 300 ரூபாய் கட்டண பக்தர்களும், 3 ஆயிரம் எண்ணிக்கையில் இலவச தரிசன பக்தர்களும் அடங்குவர்.  இந்நிலையில் இன்று  முதல் இம்மாதம் 30ம் தேதி வரை 300 ரூபாய் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை  மேலும் 3 ஆயிரம் வரை திருப்பதி திருமலை தேவஸ்தானம் அதிகரித்துள்ளது. 

இதனால் ஏழுமலையான் கோயிலில் நாளொன்றுக்கு 12,750 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியும் என தேவஸ்தானம் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments