ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சீனாவில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடை-ஜேபி நட்டா குற்றச்சாட்டு

0 6534

சோனியா காந்தி தலைமை வகிக்கும் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சீனாவில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடை பெறப்பட்டதாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா குற்றம் சாட்டி உள்ளார்.

மத்திய பிரதேச மாநில கட்சித் தொண்டர்களுக்காக நடத்திய ஜன் சம்வாத் டிஜிட்டல் உரையில் அவர் இந்த குற்றச்சாட்டை கூறினார். 2005-2006 காலகட்டத்தில் சீனாவில் இருந்தும், டெல்லியில் உள்ள சீன தூதரகம் வழியாகவும் 3 லட்சம் டாலர்களை ராஜீவ் காந்தி அறக்கட்டளை பெற்றது என நட்டா தெரிவித்தார்.

இது சீனாவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள உறவை காட்டுவதாக குறிப்பிட்ட அவர், 2017 டோக்லாம் எல்லைப் பிரச்சனையின் போது, சீன தூதுவருடன், ராகுல் காந்தி ரகசிய ஆலோசனை நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டினார். இப்போது, கால்வான் எல்லை பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி தவறான தகவல்களை வெளியிடுவதாகவும் நட்டா தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments