சசிகலாவின் பினாமி எனக் கூறி சொத்துக்கள் முடக்கப்பட்ட நிதிநிறுவன உரிமையாளர் மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சசிகலாவின் பினாமி எனக் கூறி சொத்துக்கள் முடக்கப்பட்ட நிதி நிறுவன உரிமையாளர் தாக்கல் செய்த மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க, வருமான வரித் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு சசிகலாவின் வீட்டிலும், நிதி நிறுவன உரிமையாளர் வி.எஸ்.ஜே.தினகரன் என்பவரின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடத்திய வருமான வரித் துறையினர், பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
அதன் அடிப்படையில், வி.எஸ்.ஜே.தினகரனை சசிகலாவின் பினாமி எனக் கூறி, சென்னை பெரம்பூர் ஸ்பெக்ட்ரம் மாலில் உள்ள அவருக்கு சொந்தமான சொத்துக்களை வருமான வரித் துறை முடக்கியது.
இந்த உத்தரவை எதிர்த்து, வி.எஸ்.ஜே.தினகரன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஸ்பெக்ட்ரம் மாலில் உள்ள தனது சொத்தை அடமானமாக வைத்து வங்கியில் கடன் பெற்றுள்ளதாகவும், சசிகலாவின் பரிவர்த்தனைகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து 2 வாரங்களில் அனைத்து ஆவணங்களுடன் விரிவாக பதிலளிக்கும்படி வருமான வரித் துறைக்கு நீதிபதி ஆர்.மகாதேவன், உத்தரவிட்டார்.
Comments