இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமாவோர் விகிதம் 57.43 சதவீதமாக உயர்வு
இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமாவோர் விகிதம் 57 புள்ளி 43 சதவீதமாக அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்து 102 பேர் குணமாகி இருப்பதாகவும், இவர்களையும் சேர்த்து இதுவரை 2 லட்சத்து 71 ஆயிரத்து 696 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
உலகில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை விகிதமானது லட்சம் பேருக்கு 120 புள்ளி 21ஆக இருப்பதாகவும், ஆனால் இந்தியாவில் அந்த எண்ணிக்கை லட்சத்துக்கு 33 புள்ளி 39ஆக இருப்பதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேபோல் உலகில் கொரோனா பலி எண்ணிக்கை லட்சம் பேருக்கு 6 புள்ளி 24ஆக இருக்கையில், இந்தியாவில் லட்சத்துக்கு 1 புள்ளி பூஜ்யம் 6ஆக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகில் கொரோனா உயிரிழப்பு குறைவான நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனவும் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
Comments