பாகிஸ்தானில் 30 சதவிகிதத்திற்கும் அதிகமான போலி விமானிகள் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி
பாகிஸ்தானில் உள்ள விமானிகளில், 30 சதவிகிதத்திற்கும் அதிகமானோர், போலி பைலட் உரிமங்களை வைத்துள்ளதாக, அந்நாட்டின் விமானப் போக்குவரத்து அமைச்சர் குலாம் சர்வார் கான் தெரிவித்திருக்கிறார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இதைத் தெரிவித்த அவர், நாட்டில் 262 விமானிகள் ஆள் மாறாட்டம் மூலம் தேர்ச்சி பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இவர்களுக்கு பறக்கும் அனுபவம் எதுவும் இல்லை என்ற அவர், போலி உரிமம் வைத்துள்ள அனைத்து விமானிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அரசு விமான நிறுவனமான PIA ல் மட்டுமின்றி பாகிஸ்தானில் உள்ள இதர தனியார் நிறுவனங்களிலும் போலி விமானிகள் இருப்பதாக கூறிய அவர் இவர்களில் பலர் வெளிநாட்டு விமானங்களை இயக்குவதையும் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Comments