லடாக் எல்லைப் பிரச்சனை கவலை அளிப்பதாக உள்ளது - பிரிட்டிஷ் பிரதமர்

0 4386

லடாக் இந்திய-சீன எல்லைப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமை மிகவும் ஆபத்தானதும், கவலை அளிப்பதுமாக உள்ளது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில், இந்திய-சீன எல்லைப் பதற்றம் குறித்து கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர் ஃபிளிக் டுரும்மாண்ட் (Flick Drummond) கேள்வி எழுப்பினார்.

இதனால் பிரிட்டனின் நலன்கள் ஏதாவது பாதிக்கப்படுமா என்று அவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் போரிஸ் ஜான்சன், லடாக் நிலைமையை பிரிட்டன் உன்னிப்பாக கவனிப்பதாகவும், பேச்சுவார்த்தைகளை வாயிலாக பிரச்சனையை இரு நாடுகளும் தீர்த்துக் கொள்ள வேண்டும் என பிரிட்டன் விரும்புவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments