கொரோனா நோய்த் தாக்கம் - இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை...
திருநெல்வேலி மாவட்டத்தில் புகழ்பெற்ற, இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருநெல்வேலி என்றாலே ‘இருட்டுக்கடை அல்வா’ என்று தனித்துவமான, தனகென்று தனி ’பிராண்ட்’ பெயரை உருவாக்கியவர் ஹரிசிங். திருநெல்வேலிக்குச் சென்றவர்கள் யாரும் அல்வா வாங்காமல் வெறும் கையோடு திரும்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு தமிழகம் முழுவதும் தனது இருட்டுக்கடை அல்வாவுக்கு நற்பெயரைப் பெற்றிருந்தார் ஹரி சிங். இந்த நிலையில் கொரொனா பாதிக்கப்பட்டதால் மன வேதனை அடைந்த ஹரிசிங் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இந்த சம்பவம் அனைவர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சில நாள்களுக்கு முன்பு காய்ச்சல், சளி ஆகியவற்றால் உடல் நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஹரி சிங். இந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த தகவல் அனைவர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது!
?????? ?????? ??????? - ???????????? ????? ?????????? ???????... #Covid19 #Corona #Iruttukkadai #Halwahttps://t.co/0PhzEneTYR
— Polimer News (@polimernews) June 25, 2020
Comments