தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு முதற் கட்டமாக 20000 ரெம்டெசிவர் ஊசி மருந்துகள் விநியோகம்

0 4640

கொரோனா அவசர சிகிச்சை மருந்தான ரெம்டெசிவர் ஊசி மருந்தை, இந்தியாவில் கோவிஃபார் என்ற பெயரில் தயாரித்துள்ள ஐதராபாத் ஹெட்டரோ நிறுவனம், முதற் கட்டமாக 20000 ஊசி மருந்துகளை, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள  தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. 

ஆபத்தான நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு, கட்டுப்படுத்தப்பட்ட அவசர சிகிச்சையாக குறைந்தது தலா 6  ஊசிகளை போட வேண்டும். 100 மில்லி  கோவிஃபார் ஊசி மருந்தின் விலை 5000 ரூபாயாக இருக்கும் என கூறப்படுகிறது.

அடுத்த இரண்டு மூன்று வாரங்களில் சுமார் ஒரு லட்சம் ஊசி மருந்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ள ஹெட்டரோ, அடுத்த கட்டமாக கொல்கத்தா,போபால், லக்னோ, பாட்னா, கொச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு அவை அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதே மருந்தை இந்தியாவில் உற்பத்தி செய்ய மற்றோர் பெரிய மருந்து நிறுவனமான சிப்லாவும் அனுமதி பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments