சென்னையில் சில்லறை விற்பனையில் காய்கறி விலை உயர்வு
சென்னை அடுத்த திருமழிசை காய்கறி சந்தைக்கு வரத்து சீராக உள்ள நிலையிலும் சில்லறை விற்பனையில் காய்கறி விலை சற்று உயர்ந்துள்ளது.
திருமழிசைக்கு சென்று காய்கறி கொள்முதல் செய்து வருவதற்கு வாகன வாடகை மற்றும் கூடுதல் செலவீனம் ஆகிறது என்பதால் காய்கறி விலையை உயர்த்தி விற்பனை செய்வதாக சில்லறை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், முழு ஊரடங்கு காரணமாக இறைச்சி, மீன் கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அதிகளவில் காய்கறிகள் வாங்குவதாலும் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக 40 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ தக்காளி 55 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 80 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ பீன்ஸ் 100 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒவ்வொரு காய்கறியும் கிலோ 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
Comments