நடப்பாண்டில் இந்தியப் பொருளாதாரம் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்திக்கும்

0 2523

நடப்பாண்டில் இந்தியப் பொருளாதாரம் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்திக்கும் என சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில் சர்வதேச  நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி 4 புள்ளி 9 என்ற அளவில் இருக்கும் என்றும் ஆனால் இது முன்பு கணித்ததை விட ஒன்று புள்ளி 9 விழுக்காடு குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் 2020ஆம் ஆண்டில் 4 புள்ளி 5 விழுக்காடு என்ற வரலாறு காணாத அளவுக்கு இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை சந்திக்கும் என்று சர்வதேச நிதியம் கணக்கிட்டுள்ளது.

அதேநேரம் 2021 ஆம் ஆண்டு பொருளாதாரம் மறுபடி ஏற்றம் காண்பதற்கான வாய்ப்பிருப்பதாகவும், 6 சதவீதம் என்ற அளவுக்கு பொருளாதாரம் உயரும் என்றும் அந்த அமைப்பு கணித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments