ஆலந்தூர் மண்டலத்தில் கொரானா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது

0 1475

சென்னையில் ஆலந்தூர் மண்டலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

15 மண்டலங்களிலும் கொரோனா பாதிப்பு 45 ஆயிரத்து 814ஆக அதிகரித்த நிலையில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6 ஆயிரத்து 837 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதற்கடுத்து அதிகபட்சமாக தண்டையார்பேட்டையில் 5,531 பேருக்கும், தேனாம்பேட்டையில் 5316 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து அண்ணாநகரில் 4922 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 4908 பேருக்கும், திருவிக நகரில் 3896 பேருக்கும், அடையாறில் 2777 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

வளசரவாக்கத்தில் 1957ஆகவும், திருவொற்றியூரில் 1755ஆகவும், அம்பத்தூரில் 1741ஆகவும், மாதவரத்தில் 1383ஆகவும், ஆலந்தூரில் 1124ஆகவும் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது.

இதுவரை 26 ஆயிரத்து 472 பேர் சிகிச்சையில் குணமான நிலையில், 668 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18,673 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments