உலக அளவில் 95.26லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
உலக அளவில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 72ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 95 லட்சத்து 26ஆயிரமாக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 40ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், ஆயிரத்து 100 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவில் 38ஆயிரம் பேர் ஒரே நாளில் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். சுமார் 800 பேர் பலியாகியுள்ளனர். மெக்சிகோவில் 6ஆயிரத்து200பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 793 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தவிர பெரு, சிலி, பாகிஸ்தான், சவுதி அரேபியா நாடுகளிலும் 3ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஒரே நாளில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்று பாதித்தவர்களில் 58ஆயிரம் பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில், 4லட்சத்து 85 ஆயிரம் பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதேசமயம் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் சுமார் 51லட்சத்தை தாண்டியுள்ளது.
📰 Subscribe to our newsletter https://t.co/sr1rEEDzJ9 pic.twitter.com/yQnscjELpE
— Reuters (@Reuters) June 25, 2020
Comments