விண்வெளியில் கண்டறியப்பட்ட புதிய மர்மப் பொருள்..

0 4707

விண்வெளியில் புவியீர்ப்பு நுண்ணலையில் சிக்கிய பொருள் சிறிய அளவிலான கருந்துளையாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாலியின் பீசா (PISA) நகரில் உள்ள ஐரோப்பிய புவியீர்ப்பு ஆய்வகத்தில் வானியல் ஆய்வில் ஈடுபட்டிருந்த போது, சுமார் 800 ஒளி ஆண்டுகள் தொலைவில் புதிய பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பொருள் சிறிய அளவிலான கருந்துளை அல்லது மிகப் பெரிய நியூட்ரான் நட்சத்திரமாக இருக்கலாம் என அனுமானித்துள்ளனர்.

அந்த மர்மப் பொருள் நமது சூரியனை விட இரண்டரை மடங்கு பெரியதாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் புவியீர்ப்பு சென்சார் அலைகளைப் பயன்படுத்தி அந்த மர்மப் பொருள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments