கொரோனா பாதிப்புக்கு இடையே கர்நாடகாவில் இன்று 10ம் வகுப்பு தேர்வுகள்
கொரோனா பாதிப்புக்கு இடையே கர்நாடகாவில் இன்று 10ம் வகுப்பு தேர்வுகள் தொடங்குகின்றன.
8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதுவதால் பெற்றோர்கள் நோய்த் தொற்று அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். கர்நாடகாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில்தான் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இன்று தேர்வுகள் துவங்குகின்றன. முன்னதாக தேர்வு மையங்கள் அனைத்தும் கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட்டன. இந்த நிகழ்வுகளை மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் நேரடியாக ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்தார். ஒவ்வொரு தேர்வு அறையிலும் 18 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறை பெரியதாக இருந்தால் 20 மாணவர்கள் என்ற விகிதத்தில்,தனிமனித இடைவெளி பராமரிக்கப்படும் என்று கூறிய அவர், ஒவ்வொரு மாணவரும் தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.
Karnataka: Students writing their Secondary School Leaving Certificate (SSLC) exams, arrive at a school in Bengaluru as the exam commences today amid #COVID19 pandemic. Students are being given mask, sanitiser and their temperature is being checked using a temperature gun. pic.twitter.com/FoUq7BEm8P
— ANI (@ANI) June 25, 2020
Comments