மேற்கு வங்கத்தில் ஜூலை 31 வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து உத்தரவு
மேற்கு வங்கத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக அடுத்த மாதம் 31ம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். பொதுமுடக்கத்தை நீட்டிப்பது தொடர்பாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தை அவர் கூட்டியிருந்தார்.
இந்த கூட்டத்தில் பங்கு கொண்ட தலைவர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், இறுதியாக ஜூலை இறுதி வரை தளர்வுகளுடன் தடைகளை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா, வைரஸ் பரவலைத் தடுக்க ஜூலை 31ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். மேலும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஜூலை 31 வரை மூடப்படும் என்றும் அரசு அலுவலகங்களைப் பொருத்தவரை, தற்போது செயல்படுவதை போல தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Lockdown in the state extended till 31st July with certain relaxations: West Bengal Government pic.twitter.com/utW4X2u6oT
— ANI (@ANI) June 24, 2020
Comments