சிறு,குறு, நடுத்தர தொழிற்துறைக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தை மத்திய அமைச்சர் துவக்கி வைத்துள்ளார்

0 2594

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சுமார் 2 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதம் அளிப்பதற்கான 20000 கோடி ரூபாய் திட்டத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி துவக்கி வைத்துள்ளார்.

இந்த பிரிவில் வரும் நிறுவனங்கள் மீண்டும் வரும் வகையில் துணைக் கடன்களை வழங்கவும், வாராக்கடன் சுமையில் இருந்து வெளிவரவும் இந்த திட்டம் உதவிகரமாக இருக்கும்.

பாதிக்கப்பட்ட நிறுவனங்களை சீரமைக்க அவற்றின் உரிமையாளர்கள் வங்கிக்கடன்களை நாடினால், அதற்கு உத்தரவாதமாக இந்த தொகை பயன்படுத்தப்படும்.

பிரதமரின் சுயசார்புத் திட்டத்தின் ஒரு அங்கமான இந்த கடன் உத்தரவாத திட்டத்தை கடந்த மாதம் 13 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments