மூடப்படாத 12 அடி ஆழ தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு

0 7193

சென்னை பல்லாவரம் அருகே மூடப்படாத 12 அடி ஆழ தொட்டியில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

நெமிலிச்சேரியில் டைல்ஸ் வேலை செய்துவரும் செல்வராஜின் 4வது மகன் சந்தோஷ் குமார், வீட்டுக்கு அருகே சகோதர சகோதரிகளுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கீழ் தளத்தில் உள்ள நீர் தொட்டி திறந்திருந்த நிலையில், சந்தோஷ் தவறி விழுந்து 5 அடி ஆழத்துக்கு இருந்த தண்ணீரில் மூழ்கினான்.

இதைக் கண்ட சிறுவனின் சகோதர, சகோதரிகள் தந்த தகவலின் பேரில் விரைந்து வந்த பெற்றோர், மற்றும் அக்கம் பக்கத்தினர், தொட்டியில் இறங்கி சிறுவனை மீட்டனர். தண்ணீரை அதிகளவு குடித்தால் மயக்க நிலையில் இருந்த சிறுவனை, மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments