1482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கி கண்காணிப்பின் கீழ் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல்
1482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் செயல்படும் 58 கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றை ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை மத்திய செய்தி-ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஷெட்யூல்ட் வங்கிகளின் மீது ரிசர்வ் வங்கிக்கு உள்ள கண்காணிப்பு அதிகாரம் கூட்டுறவு வங்கிகளுக்கும் விரிவு படுத்தப்படுவதாக அவர் கூறினார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலைய அந்தஸ்திற்கு உயர்த்தவும் மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
இஸ்ரோவின் விண்வெளித் திட்ட வசதிகளையும், கட்டமைப்புகளையும் தனியார்துறையினர் பயன்படுத்துவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவையும் மத்திய அமைச்சரவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
Comments