ரூ. 10 கோடி செலவு; இஸ்லாமாபாத்தில் கட்டப்படும் முதல் இந்து கோயில்! செலவை ஏற்றது பாகிஸ்தான் அரசு...

0 5569

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்து கோயில் கிடையாது. இருந்த கோயில்களும் சிதிலமடைந்து கிடக்கின்றன. இதுவரை, இந்துக்கள் மரணமடைந்தால் நகரை விட்டு வெளியே, ஏதாவது ஒரு பகுதிக்கு சென்றுதான் உடலை எரியூட்ட முடியும். விடுதலை பெற்று 73 ஆண்டுகளுக்கு பிறகு, முதன் முறையாக இஸ்லாமாபாத்தில் இந்து கோயில் கட்ட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, இஸ்லாமபாத்தின் ஹெச் - 1 செக்டார் பகுதியில் 20,000 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத் இந்து பஞ்சாயத்து என்ற அமைப்பு சார்பில் இந்த கோயில் கட்டப்படுகிறது. கோயிலுக்கு ஸ்ரீ கிருஷ்ணா மந்திர் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கோயில் கட்ட ரூ. 10 கோடியை பாகிஸ்தான் அரசு வழங்குகிறது.

கோயில் கட்டுமானப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. பாகிஸ்தான் மத சமய வழிபாட்டுத்துறை அமைச்சர் பிர் நுருல் ஹக் காதிரி, பாகிஸ்தான் நாடாளுமன்ற மனித உரிமைகள் பிரிவுச் செயலர் லால் சந்த் மால்கி ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய லால் சந்த் மால்கி, ''இஸ்லாமாபாத்தில் இந்து சமயத்தைப் பின்பற்றும் மக்கள் தொகை உயர்ந்துள்ளது. அவர்களின் நீண்ட கால கோரிக்கையும் கோயில் கட்டுவது வழியாக நிறைவுற்றுள்ளது. 1947- ம் ஆண்டுக்கு முன் பாகிஸ்தானில் அமைந்திருந்த இந்து கோயில்களின் கட்டுமானத்தின்படியும் வடிவமைப்பின்படியும் புதிய இந்து கோயில் கட்டப்படும். இந்து மக்கள் பயன்பாட்டுக்காக மயானமும் அமைக்கப்படும்'' என்றார்.

கடந்த 2017- ம் ஆண்டே இஸ்லாமாபாத்தில் இந்து கோயில் கட்ட நிலம் ஒதுக்கப்பட்டாலும் நடைமுறை காரணங்களுக்காக கோயில் அமைவது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இஸ்லாமாபாத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் கோயில் வளாகத்தையடுத்து தனியாக எரியூட்டும் மயானமும் அமைக்கப்படுகிறது. இஸ்லாமாபாத்தில் அமையும் முதல் இந்து மயானம் இதுவாகும்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments