சென்னையில் போலி இ பாஸ் தயாரித்துக் கொடுத்ததாக தலைமைச் செயலக ஊழியர் உள்ளிட்ட 5 பேர் கைது

0 4495

மூவாயிரம் ரூபாய் முதல் எட்டாயிரம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டு இ பாஸ் வழங்கிய குற்றச்சாட்டில் சென்னையில் வருவாய் ஆய்வாளர்கள் இருவர் உட்பட 5 பேரை சைபர்கிரைம் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், திருமணம், இறுதிச் சடங்கு, மருத்துவம் ஆகியவற்றுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், வெளிமாநிலங்களுக்குச் செல்லவும் இ பாஸ் வழங்கப்படுகிறது.

முறையாக விண்ணப்பித்தவர்களுக்கு இ பாஸ் கிடைக்கவில்லை என்றும், அதேநேரம் இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்தால் இ பாஸ் பெற முடிவதாகவும் சென்னை காவல்துறைக்குப் புகார் வந்தது. இதையடுத்து சைபர் கிரைம் பிரிவினர் விசாரித்ததில், சென்னையில் இ பாஸ் வழங்கும் பிரிவில் பணியாற்றிய வருவாய் ஆய்வாளர்கள் குமரேசன், உதயா ஆகியோர் மூவாயிரம் ரூபாய் முதல் எட்டாயிரம் ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு இ பாஸ் வழங்கியது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள், அவர்களுக்குத் தரகராகச் செயல்பட்ட டிராவல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இருவர், கால் டாக்சி ஓட்டுநர் ஒருவர் என மொத்தம் 5 பேரைக் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments