நாட்டிலேயே முதல் முறையாக டெல்லியில் பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகம்...
நாட்டிலேயே முதல் முறையாக டெல்லியில் முதன்முறையாக டீசல் விலை பெட்ரோல் விலையை விட அதிகமாக உள்ளது.
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.
இந்நிலையில் தொடர்ந்து 17ஆவது நாளாகப் பெட்ரோல், டீசல் விலை சிறிது சிறிதாக உயர்த்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையில் சிறிதளவே வேறுபாடு இருந்து வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் முதன்முறையாகப் பெட்ரோல் விலையை விட டீசல் விலை உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் விலை 79 ரூபாய் 88 காசுகளாக உள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 79 ரூபாய் 76 காசுகளாக உள்ளது. பெட்ரோல் விலையில் 64 விழுக்காடும், டீசல் விலையில் 63 விழுக்காடும் மத்திய மாநில அரசுகளின் வரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments