மீண்டும் சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலாக வாய்ப்பு-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
ஊரடங்கில் இருந்து அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளை முறையாக, பாதுகாப்பாக பின்பற்றாத மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தும் நிலை உள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை திரு.வி.நகர் மண்டலத்திற்கு உட்பட்ட புளியந்தோப்பு கே.பி.பூங்கா குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ஆயிரத்து400 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இக்கட்டான சூழலில் கொரோனா ஏற்படுத்தி வரும் சாவல்களை வெல்ல களத்தில் பணியாற்றுபவர்களை ஊக்குவிப்பதே சிறந்தது என்றும், மக்களை காப்பாற்றுவதில் ராணுவ வீரரை போல் முதலமைச்சர் களத்தில் நின்று பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.
மீண்டும் சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலாக வாய்ப்பு-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் #LockDown | #MinisterRBUdayakumar https://t.co/lghzQu5S9Z
— Polimer News (@polimernews) June 24, 2020
Comments