கோவில்பட்டி சிறையில் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு-தமிழக போலீஸ் டிஜிபி மற்றும் தூத்துக்குடி எஸ்பி ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

0 13678

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த விவகாரத்தில் தமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குநரும், தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரும் காணொலியில் விசாரணைக்கு ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுக் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.

காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் தாக்கியதாலேயே இருவரும் உயிரிழந்ததாகக் ஜெயராஜின் மனைவி செல்வராணி குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து வழக்காக விசாரிப்பதாகத் தெரிவித்தது.

நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி அமர்வு, தமிழக காவல்துறைத் தலைமை இயக்குநரும், தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரும் காணொலியில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கைக் பகல் 12.30 மணி வரை ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments