சீனப் பொருட்கள் இறக்குமதிக்கு வரியை உயர்த்த அரசு பரிசீலனை
சீனப் பொருட்களின் இறக்குமதியைத் தடுக்க வரியை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
கால்வன் மோதலையடுத்துச் சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்கிற கருத்து நாடு முழுவதும் வலுத்து வருகிறது. இந்நிலையில் மின்னுற்பத்தி, சேவை, விநியோக திட்டங்களில் சீனப் பொருட்களின் பயன்பாட்டைத் தடுக்க அரசு கொள்கைகளை வகுத்து வருகிறது.
இதற்காகச் சீனப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கவும், இறக்குமதி செய்ய முன்அனுமதி பெற வேண்டும் எனக் கட்டுப்பாடு விதிக்கவும், உள்நாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த மானியத்துடன் நிதி உதவி செய்யவும் அரசு பரிசீலித்து வருகிறது.
இந்தியாவின் மின் கட்டமைப்பை குறிவைத்து நாள்தோறும் குறைந்தது 30 சைபர் தாக்குதல் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. சீனாவில் இருந்தே இந்த தாக்குதல் அதிகம் தொடுக்கப்படுவதால் அந்நாட்டின் பங்களிப்பை மின்துறையில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சொலலப்படுகிறது.
Comments