ரூ.4 ஆயிரம் கோடி முறைகேடு வழக்கில் சிக்கிய ஐ.ஏ.எஸ்.அதிகாரி, வீட்டில் சடலமாக மீட்பு
பெங்களூரில் சுமார் 4 ஆயிரம் கோடி முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய் சங்கர் தற்கொலை செய்துக் கொண்டார்.
தங்கநகை சீட்டு கம்பெனி நடத்திய ஐஎம்.ஏ என்ற நிதி நிறுவனம் பல ஆயிரம் பேரிடம் பெற்ற முதலீடுகளை திருப்பித் தராமல் செய்த முறைகேட்டில் அப்போது நகர நிர்வாகத்துறை துணை ஆணையராக இருந்த விஜய் சங்கர் அந்நிறுவனத்தின் உரிமையாளர் மன்சூர் கானை விடுவிக்க ஒன்றரை கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் அவர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார்.
துபாய்க்குத் தப்பிச் சென்ற மன்சூர் கான் உள்பட இவ்வழக்கில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு விஜய் சங்கர் மீது விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் கர்நாடக அரசிடம் அனுமதி கோரியிருந்தனர்.
இந்நிலையில் விஜய் சங்கர் தமது இல்லத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர்.
Comments