"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
ரிலையன்ஸ் குழுமத்தின் நிதி திரட்டலானது வரலாற்று நிகழ்வு- முகேஷ் அம்பானி
சுமார் 5 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சவுதி அரம்கோ நிறுவனத்துடன் ஆன, ரிலையன்ஸ் குழுமத்தின் ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக, அதன் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸை கடனில்லா நிறுவனமாக மாற்றும் நோக்கில், அதன் எண்ணெய் மற்றும் ரசாயன வர்த்தக துறையில் உள்ள 20 சதவீத பங்குகளை, அரம்கோ நிறுவனத்திற்கு விற்க உள்ளதாக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ள அந்நிறுவனத்தின் ஆண்டறிக்கையில், அரம்கோ நிறுவனத்துடன் ஆன ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய கார்ப்ரேட் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவில், கடந்த 2 மாதங்களில் ஜியோ நிறுவனத்தின் பங்குகள் விற்கப்பட்டு, சுமார் ஒரு லட்சத்து 68 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
Comments