பெப்சி நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
தங்கள் நிறுவனத்தின் குளிர்பானங்கள் மற்றும் சிற்றுண்டி பொருட்கள் பாதுகாப்பானவை என, சீனாவில் உள்ள பெப்சியின் கிளை நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வீசப்படுவதாக கூறப்படும் நிலையில், பீஜிங்கில் உள்ள பெப்சி நிறுவனத்தின் உணவு பதப்படுத்தும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்த தகவல் நுகர்வோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியைதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நிறுவனத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, நோய்த்தொற்று பரவல் அதிகரித்துள்ள பீஜிங்கில் உணவு வினியோக நிறுவனங்கள், உணவகங்கள் ஆகியவற்றின் ஊழியர்களை குறிவைத்து அதிக அளவிலான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன..
#PepsiCo shuts operations in Beijing as several employees test #COVID19 positive https://t.co/LtJ4aiRjlA pic.twitter.com/LA5DYlIyEr
— Business Insider India?? (@BiIndia) June 21, 2020
Comments