கொரோனா சிகிச்சை மருந்தை விளம்பரமோ, விற்பனையோ செய்யக்கூடாது பதஞ்சலி நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவு

0 5852

பாபா ராம் தேவ் அறிமுகப்படுத்திய கொரோனா சிகிச்சை மருந்தை ஆய்வு செய்து முடிக்கும் வரை, அது தொடர்பான விளம்பரங்களையும், அது கொரோனாவை குணப்படுத்தும் போன்ற அறிவிப்புகளையும் நிறுத்தி வைக்குமாறும் பதஞ்சலி நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பதஞ்சலியின் கொரோனில்-சுவாசரி என்ற மருந்தில் அடங்கியுள்ள பொருட்கள், நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள், மருந்து தயாரிப்புக்கான உரிமம் ஆகியவற்றின் நகல்களை தாக்கல் செய்யுமாறு ஆயுஷ் அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.

கொரோனாவை முழுமையாக குணப்படுத்தும் மருந்து என கொரோனில்-சுவாசரியை ஹரித்வாரில் ராம் தேவ் அறிமுகம் செய்தார். 280 பேரிடம் கொடுத்து பரிசோதித்ததில் 100 சதவிகித குணம் கிடைத்ததாக கூறிய அவர், இன்னும் ஒரு வார காலத்தில் பதஞ்சலி ஸ்டோரிகளில் இது கிடைக்கும் என்றும் விலை 545 ரூபாய் என்றும் அறிவித்தார். இந்நிலையில், மருந்து குறித்த கேள்விகளை எழுப்பி மத்திய அரசு தடை விதித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments